கொதிக்கும் பால் விலை உயர்வு நாளை முதல் அமல்: விலை பட்டியல் இதோ...

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒருலிட்டர் "க்ரீன் மேஜிக்' ஆவின் பால் இனி ரூ.47-க்கும், பொதுமக்கள் அதிகம்
கொதிக்கும் பால் விலை உயர்வு நாளை முதல் அமல்: விலை பட்டியல் இதோ...
Published on
Updated on
2 min read


ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு
லிட்டர் "க்ரீன் மேஜிக்' ஆவின் பால் இனி ரூ.47-க்கும், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் "ஆவின் நைஸ்' பால் இனி ரூ.42-க்கும் கிடைக்கும்.

ஆவின் பால் விலை மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று சனிக்கிழமை வெளியிட்டது. 

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை உயர்த்துவதால் பால் பணப்பட்டுவாடா பாதிப்படையக் கூடாது என்பதாலும், நுகர்வோருக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தவும் அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி அறிவித்தது. இந்த விலை உயர்வானது நாளை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) முதல் நடைமுறைக்கு வருகிறது. 

நாளை முதல் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை உயர்வு பட்டியல் விவரம்: 

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு விவரம்: 

பால்பழைய விலைபுதிய விலை விலை உயர்வு
பசும்பால் (1 லிட்டர்)    ரூ.28.00   ரூ.32.00   ரூ.4.00
எருமைப் பால் (1 லிட்டர்)    ரூ.35 .00   ரூ.41 .00   ரூ.6.00


ஆவின் பால் அட்டைதாரர்களுக்கான விலை உயர்வு விவரம்:

பால்பழைய விலைபுதிய விலை  
நீலம்       ரூ.34.00      ரூ.40.00 
பச்சை       ரூ.39.00      ரூ.45.00 
ஆரஞ்சு       ரூ.43.00       ரூ.49.00 
மெஜந்தா        ரூ.35.00      ரூ.41.00 

மாதந்திர பால் அட்டை வைத்திருப்போர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் கணக்கிட்டு கூடுதல் விலையை பால் அட்டைதாரர்கள் கூடுதலாக ரூ.180 செலுத்த வேண்டும்.

சில்லறை விற்பனை விலை உயர்வு விவரம்:

பால்பழைய விலைபுதிய விலை
நீலம் (நைஸ்)         ரூ.36.00           ரூ.42.00
பச்சை (க்ரீன் மேஜிக்)         ரூ.41.00           ரூ.47.00
ஆரஞ்சு (ப்ரீமியம்)         ரூ.45.00            ரூ.51.00
மெஜந்தா (டயட்)         ரூ.34.00           ரூ.40.00

வெண்ணெய், நெய் விலையும் உயருமா? 
ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய், நெய் போன்ற பொருள்களை பெரிதும் விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த சில தினங்களில் அதிர்ச்சி காத்திருக்கிறது. ஆவின் பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆவின் பாலில் இருந்து மதிப்பு கூட்டப்பட்டு தயாரிக்கப்படும் அந்தப் பொருள்களின் விலையும் விரைவில் உயர்த்தப்படும் எனவும், இதற்கான அதிரடி அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாக உள்ளது.

தற்போது அரை கிலோ வெண்ணெய் ரூ.220 ஆகவும், நெய் அரை லிட்டர் ரூ.235 ஆகவும், பாதாம் மிக்ஸ் 200 கிராம் ரூ.80 ஆகவும், கோவா 500 கிராம் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com