உள்ளாட்சி தேர்தல்: வேலூர், பரமத்தி காவல் நிலையங்களில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூர் வட்டத்தில் உள்ள கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் வரும் 27-ஆம் தேதியும், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 30-ஆம்
உள்ளாட்சி தேர்தல்: வேலூர், பரமத்தி காவல் நிலையங்களில்  காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூர் வட்டத்தில் உள்ள கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் வரும் 27-ஆம் தேதியும், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 30-ஆம் தேதியும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

வாக்குபதிவு மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களை ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் மெகராஜ், தேர்தல் பார்வையாளர் பிரபாகர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அருள்அரசு ஆகியோர் பார்யிட்டு சென்றனர். 

இந்த நிலையில் செவ்வாய்கிழமை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு உட்பட்ட வேலூர் மற்றும் பரமத்தியில் காவல் நிலையங்களில் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருள்அரசு தேர்தல் மற்றும் வாக்கும் எண்ணிக்கையின் போதும்,வாக்கு பெட்டிகளை பாதுகாக்கும் விதம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்,கண்காண்காணிப்பு கேமரா உள்ளிடவை குறித்தும் பரமத்தி வேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர்கள் மனோகரன்,செந்தில்குமார் உள்ளிட்ட போலீசாரிடம் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com