
புதுதில்லி: தில்லி உள்பட வட மாநிலங்களில் கடும் குளிர் காற்று வீசுவதாலும், கடும் பனி மூட்டம் நிலவுவதாலும் தலைநகருக்கு சனிக்கிழமை 20 ரயில்கள் தாமதமாகி உள்ளன.
தில்லியில் கடந்த மாதம் தொடக்கத்திலிருந்து கடும் குளிர் நிலவுகிறது. இதனால், காற்றில் மாசு அதிகரித்து, காற்றின் தரம் மோசம், மிகவும் மோசம் எனும் பிரிவில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. பின்னர் மாதக் கடைசியில் கடும் குளிர் காற்றும் கடும் பனிமூட்டமும் நிலவத் தொடங்கியது. இதன் காரணமாக கடந்த 15 நாள்களாக காற்றின் தரம் கடுமையான பிரிவில் இருந்தது. இதேபோன்று அண்டை மாநிலங்களான ஹரியாணா, சண்டீகர், பஞ்சாப், மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகியவற்றிலும் கடுமையான குளிர் காற்று வீசி வருகிறது. மேலும், பனிப் புகை மூட்டமும் தொடர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதன் அடர் பனிப் புகை மூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை தில்லி உள்பட வடமாநிலங்களில் குளிர் காற்று வீசியதுடன் கடும் பனிமூட்டமும் நிலவியது. இதனால், தில்லிக்கு 20 ரயில்கள் தாமதமாக வந்தன. 'கடும் பனிமூட்டம் காரணமாக ரயில்கள் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.