

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் இருந்து பாசனத்தேவைக்காக இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
முன்னதாக பொள்ளாச்சி கால்வாய், வேட்டைகாரன்புதூர் கால்வாய், சேத்துமடை கால்வாய், ஆழியாறு ஊட்டுக்கால்வாய்களில் இருந்து முதல்போக பாசனத்தேவைக்காக தண்ணீர் திறந்துவிடும்படி அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, இன்று முதல் இடைவெளி விட்டு 70 நாள்களுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 250 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்து, அதனை மலர் தூவி வரவேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.