

புதுக்கோட்டையில் சிறைக் கைதிகளை கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் விட்டுச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைக்க உதவிய, ஆயுள் தண்டனை கைதிகள் இருவரது செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புதுக்கோட்டை அரசினர் மகளிர் கல்லூரி அருகே சிறைத்துறை சார்பில் சிறைக்கைதிகளைக் கொண்டு நடத்தப்படும் ப்ரீடம் பெட்ரோல் பங்கில் கடந்த 10 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிய ஜானகிராமன் என்பவர், ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் இருந்த தனது பணப்பையை அங்கேயே விட்டு சென்றுவிட்டார்.
இதனை கண்ட ஆயுள் தண்டனை கைதிகளான பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கார்த்திக் மற்றும் புஷ்பராஜ் ஆகியோர், அந்த பணப்பையை எடுத்து சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ஜானகி ராமனை வரவழைத்து அந்த பணத்தை ஒப்படைத்த சிறை கண்காணிப்பாளர் நேர்மையாக செயல்பட்ட கார்த்திக், சிவகுமார் ஆகியோருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். ஆயுள் தண்டனை கைதிகளின் இத்தகைய செயல் அனைவரது மத்தியிலும் மிகுந்த பாரட்டை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.