அமெரிக்க டெக்ஸாஸ் மாகாண துப்பாக்கிச் சூடு: பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு 

அமெரிக்காவில் இளைஞர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்ளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. 20 பேர்
அமெரிக்க டெக்ஸாஸ் மாகாண துப்பாக்கிச் சூடு: பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு 
Published on
Updated on
1 min read


அமெரிக்காவில் இளைஞர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்ளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. 20 பேர் காயமடைந்துள்ளனர். 

டெக்ஸாஸ் மாகாணம், மிட்லாண்ட் நகரில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றை போக்குவரத்து காவல் துறையினர் ஆவண சோதனைக்காக நிறுத்தினர்.

 அப்போது அந்தக் காரை ஒட்டி வந்த நபர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார்.
 அதனைத் தொடர்ந்து, அவரது காரை துரத்திச் சென்று தடுத்து நிறுத்திய போலீஸாரை நோக்கியும் அந்த நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அதன் பிறகு, பொதுமக்கள் மீதும் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

 பிறகு தனது காரை விட்டிறங்கிய அந்த நபர், மற்றொரு தபால் துறை வாகனத்தை எடுத்துக் கொண்டு வழியில் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டவாறே சென்றார்.

 இறுதியில் சினெர்ஜி திரையரங்குக்குச் சென்று அங்கு துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

இந்தத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்; காயமடைந்த 2 குழந்தைகள் உள்பட 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்காலம் என அஞ்சப்படுகிறது. 

இந்நிலையில், சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. 

துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியது யார் எதற்காக இந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்பது குறித்து டெக்ஸாஸ் மாகாண போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அமெரிக்காவில் நடைபெறும் 38-ஆவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com