தமிழக அரசியலில் ரஜினிகாந்த் திருப்புமுனையை ஏற்படுத்துவார்: அா்ஜூன் சம்பத் பரபப்பு பேட்டி 

தமிழகத்தில் 2012 இல் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் ரஜினிகாந்த் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என இந்து மக்கள்
தமிழக அரசியலில் ரஜினிகாந்த் திருப்புமுனையை ஏற்படுத்துவார்: அா்ஜூன் சம்பத் பரபப்பு பேட்டி 
Published on
Updated on
1 min read


கன்னியாகுமரி: தமிழகத்தில் 2012 இல் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் ரஜினிகாந்த் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தார். 

கன்னியாகுமரியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்படுவார் என்ற தகவல் தவறானது. அவா் விரைவில் தனிக்கட்சி தொடங்குவார். நடைபெறவிருக்கும் 2021 பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்றார். 

மேலும், ஒரே நாடு, ஒரே ரேஷன் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இவற்றை திமுக, மதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் அரசியலாக்கி வருகின்றனா். அண்மையில் தி.மு.க., எம்.பி., கனிமொழி இலங்கைக்கு பயணம் செய்து அங்கு, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி., இல்ல திருமண விழாவில் பங்கேற்றதோடு, முக்கியமான சிலரையும் சந்தித்து பேசியுள்ளார்.  திமுகவுக்கும், இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கும் என்ன தொடா்பு உள்ளது. கனிமொழியின் இலங்கை பயணத்தை, என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும். 

தமிழக கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட விலைமதிப்பற்ற சிலைகளை மீட்கும் முயற்சியில், ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிலைகளை மீட்கும் இக்குழுவுக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித உதவியும் செய்யவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பாரம்பரிய சிலைகளை மீட்கும் முயற்சிக்கு மத்திய, மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com