தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து
தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து இன்று திங்கள்கிழமை (செப்.22) முறையே லிட்டருக்கு 31 காசுகளும், 20 காசுகளும் உயர்ந்துள்ளது. கடந்த ஆறு நாட்களாக எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மறைமுகமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

சுமார் 15 ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. சில நாட்கள் விலை உயராமலும், எந்த மாற்றமும் ஏற்படாமலும் இருந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை அளித்த நிலையில் இரு தினங்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து ஒரு லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.76.83 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.70.76 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

கடந்த ஆறு நாட்களில் எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மறைமுகமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆறு நாட்களில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.1.98, டீசல் ஒரு லிட்டருக்க ரூ.1.61 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com