ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு
By DIN | Published On : 04th August 2019 06:08 PM | Last Updated : 04th August 2019 06:08 PM | அ+அ அ- |

ஜப்பானில் இன்று ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ஜப்பானின் மேற்கு பகுதியில் ஹொன்சு தீவில் இன்று ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவாகி உள்ளதாக கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி பயந்து ஓடினர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர் அல்லது காயமுற்றவர் குறித்து இதுவரை தகவல் இல்லை.