நீதிமன்றங்களில் 2 லட்சத்துக்கும் மேலான வழக்குகள் தேக்கம்: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை
By DIN | Published On : 04th August 2019 09:58 PM | Last Updated : 04th August 2019 09:58 PM | அ+அ அ- |

கவுகாத்தி: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழா ஒன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கலந்துகொண்டு பேசுகையில், நாடு முழுவதும் காலியாக உள்ள 6 ஆயிரம் விசாரணை நீதிமன்ற நீதிபதிகளின் பணியிடங்களில் இதுவரை 4 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் சுமார் 1500 விசாரணை நீதிமன்ற நீதிபதிகளின் காலியிடங்கள் நவம்பர் இறுதிக்குள் அல்லது டிசம்பர் இறுதிக்குள் நிரப்பப்படுவர் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் சுமார் 90 லட்சத்துக்கு மேல் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளில், 20 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளிலும், 2 கோடி 10 லட்சம் கிரிமினல் வழக்குகளில், 1 கோடிக்கு மேற்பட்ட வழக்குகள் சம்மன் கூட இன்னும் அனுப்பப்படாத நிலையில் உள்ளதாக வேதனை தெரிவித்த தலைமை நீதிபதி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதில் நீதிபதிகள் கவனம் செலுத்த வேண்டும் வலியுறுத்தினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...