தமிழகத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி
By DIN | Published On : 03rd July 2019 09:53 AM | Last Updated : 03rd July 2019 09:53 AM | அ+அ அ- |

தமிழகத்தில் முதற்கட்டமாக 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவும் சூழலில் நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் புதிதாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 20 இடங்களில் கிணறுகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருவாரூரில் நேற்று ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக காவல்துறை அனுமதியை மீறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக 290 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.