

சென்னை: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தர வரிசை பட்டியலை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியலில் தர்மபுரியை சேர்ந்த சுவாதி முதலிடத்தையும், தூத்துக்குடியை சேர்ந்த ஜேன் சில்வியா 2வது இடத்தையும், கன்னியாகுமரியை சேர்ந்த ஹர்ஷா 3வது இடத்தையும் பிடித்துள்ளார். கால்நடை மருத்துவபடிப்பிற்கான கவுன்சிலிங் ஜூலை 3வது வாரம் நடைபெற உள்ளது.
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கால்நடை மருத்துவ படிப்பிற்கான இடங்களை அதிகப்படுத்தி உள்ளோம், நாமக்கல், ஒரத்தநாடு, நெல்லை கல்லூரிகளில் 80 இடங்களில் மாணவர் சேர்க்கை நடக்கிறது என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.