பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
By DIN | Published On : 15th May 2019 09:04 AM | Last Updated : 15th May 2019 09:34 AM | அ+அ அ- |

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகாக பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியாவின் கோகோபோ என்ற நகரின் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.7 அலகாக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது உயிரிழப்பும் குறித்த எந்த தகவலும் வெளியாகாத நிலையில், பப்புவா நியூ கினியா மற்றும் அருகாமையில் உள்ள சாலமன் தீவு ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிக்டர் அளவில் 7.5 அலகுகளான நிலநடுக்கத்தில் வீடுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 125 பேர் உயிரிழந்தனர்.