குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மோடி ராஜிநாமா கடிதம்

தில்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. அத்துடன் 16-வது
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மோடி ராஜிநாமா கடிதம்


தில்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. அத்துடன் 16-வது மக்களவையை கலைத்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் மோடி வழங்கினார். 

17-வது லோக்சபா தேர்தலில் நாடு முழுக்க பாஜக 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைகிறது. இதன் மூலம் பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் அரியணை ஏறுகிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான 16-வது மக்களவை முடிந்ததை அடுத்து 17-வது மக்களவைக்கு கடந்த ஏப்ரல் மாதம் 542 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 ஆம் தொடங்கிய தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி முன்னிலை, பின்னிலை மற்றும் வெற்றி குறித்து அறிவிப்புகள் வெளியானது.

இந்நிலையில், பாஜக 303 இடங்களிலும், காங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 92 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. திமுக 23 இடங்களில் வெற்றி பெற்று தேசிய அளவில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. 

17-வது மக்களவைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக மட்டும் 303 தொகுதிகளில் தனித்து வெற்று பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. மீண்டும் மோடி பிரதமாகிறார். 

இந்நிலையில், இன்று மாலை தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தற்போதைய அமைச்சரவை மற்றும் 16-வது மக்களவையை முடிவுக்கு வருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது மத்திய அமைச்சர்கள் தங்களது ராஜிநாமா கடித்தை வழங்கினார்கள். அதில், அருண் ஜேட்லி தவிர, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். 

அமைச்சரவைக்கூட்டம் முடிந்த நிலையில், பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார். 

அப்போது, முறைப்படி தனது அமைச்சரவையின் ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மோடி வழங்கினார். ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய அரசு அமையும் வரை பிரதமராக நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, வரும் 30 ஆம் தேதி 2-வது முறையாக நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

PM Narendra Modi met the President today and tendered his resignation along with the Council of Ministers. The President has accepted the resignation and has requested Narendra Modi and the Council of Ministers to continue till the new Government assumes office.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com