தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார் தெரியுமா?

17-வது மக்களவைக்கான தேர்தலில் போட்டியிட்ட திமுக தமிழகம், புதுச்சேரி உள்பட 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று சாதனை
தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார் தெரியுமா?

17-வது மக்களவைக்கான தேர்தலில் போட்டியிட்ட திமுக தமிழகம், புதுச்சேரி உள்பட 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 39 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று வியாழக்கிழமை (மே 23) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட கூட்டணி 39 தொகுதிகளில் 38 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.  

அதேசமயம், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்தரநாத் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை திமுக கூட்டணி பெற்றுள்ளது.

வெற்றி நிலவரம்: திமுக - 18, காங்கிரஸ் - 9, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 2, இந்திய கம்யூனிஸ்டு - 2, விடுதலை சிறுத்தைகள் - 2, மதிமுக - 1, ஐஜேகே - 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1, இந்திய ஜனநாயக கட்சி - 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1.

இதில், தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் யார் என்பதை பார்ப்போம். 

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் வேலுசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவைவிட கூடுதலாக 5,38,972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

1. திண்டுக்கல் - வேலுசாமி (திமுக) 7,46,523  - வித்தியாசம் - 5,38, 972 வாக்குகள். 
2. ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர். பாலு (திமுக) - 7,93, 281 - வித்தியாசம் - 5,07,955 வாக்குகள்.
3. வடசென்னை - டாக்டர் கலாநிதி வீராசாமி (திமுக) - 5,90,986 வித்தியாசம் -  4,61,518 வாக்குகள்
4. திருச்சி  -  திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) - 6,21,285 - வித்தியாசம் 4- ,59,286 வாக்குகள். 
5. கரூர்  -  ஜோதிமணி (காங்கிரஸ்) - 6,48,254 - வித்தியாசம் - 4,20,546 வாக்குகள்.
6. பெரம்பலூர் - பாரிவேந்தர் (இந்திய ஜனநாயக கட்சி) - 6,83,697 - வித்தியாசம் - 4,03,518 வாக்குகள்.
7. தூத்துக்குடி - கனிமொழி (திமுக) - 5,63,143 - வித்தியாசம் - 3,47,209 வாக்குகள். 
8. கள்ளக்குறிச்சி - கெளதம் சிகாமணி (திமுக) - 7,21,713 - வித்தியாசம் - 3,99,919 வாக்குகள். 
9. அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் (திமுக) - 6,72,190 - வித்தியாசம் - 3,28,956 வாக்குகள்.
10. மத்திய சென்னை - தயாநிதிமாறன் (திமுக) - 4,48,911 - வித்தியாசம் - 3,1,520 வாக்குகள்.  
11. திருவள்ளூர் - ஜெயக்குமார் (காங்கிரஸ்) 7,53,523 - வித்தியாசம் - 3,56,955, 
12. திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை (திமுக) - 6,66,272 - வித்தியாசம் - 3,04,187 வாக்குகள்.
13. காஞ்சிபுரம் - ஜி.செல்வம் (திமுக) - 6,84,004 - வித்தியாசம் - 2,86,632 வாக்குகள்
14. கன்னியாகுமாரி - ஹெச்.வசந்தகுமார் (காங்கிரஸ்) - 6,26,916 - வித்தியாசம் - 2,59,808

15. சிதம்பரம் - திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) 5,00,229 - வித்தியாசம் - 3,219. எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் பெற்ற வாக்குகள் 4,97,010.

16. தருமபுரி - டிஎன்வி. செ.செந்தில்குமார் (திமுக) - 5,51,454 - வித்தியாசம் - 63,304 எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி பெற்ற வாக்குகள் - 4,88,150.
சிதம்பரம் மற்றும் தருமபுரியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவரும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 

வெற்றி பெற்ற 38 வேட்பாளர்களில் 3 பேர் 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளனர். 12 பேர் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com