மெட்ரோ ரயில் பணிகள் நிறைவு: அண்ணாசாலை இரு வழிப்பாதையாக மாற்றம்
By DIN | Published On : 11th September 2019 10:56 AM | Last Updated : 11th September 2019 11:00 AM | அ+அ அ- |

மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததை அடுத்து 9 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாசாலை இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் 2011 ஆம் ஆண்டு சென்னை அண்ணாசாலை மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அண்ணா சாலையில் எல்ஐசி மற்றும் ஸ்பென்சர் வழியாக அண்ணா மேம்பாலம் செல்லக்கூடிய வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக இயக்கப்பட்டன.
அண்ணா சாலை, ஏ.ஜி.டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரை உள்ள 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரயில் நிலைய பணிகள், டிக்கெட் கவுண்ட்டர்கள், பயணிகள் அமரும் வசதி உள்ளிட்ட பணிகள் தற்போது நிறைவடைந்து.
இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து ஒருவழி சாலையாக இருந்த அண்ணாசாலை காலை 8 மணி முதல் மீண்டும் இருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. இரண்டு நாட்கள் சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் இந்த சாலை இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.