பொருளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டம் எங்கே? - ப.சிதம்பரம் கேள்வி
By DIN | Published On : 11th September 2019 12:48 PM | Last Updated : 11th September 2019 12:48 PM | அ+அ அ- |

புதுதில்லி: இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிப்பதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் தனது குடும்பத்தினர் உதவியுடன் சமூக ஊடகமான டிவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளதாவது: இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது, இந்திய பொருளாதார சரிவால் ஏழைகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைவான ஊதியம், குறைந்த முதலீடு, வர்த்தகம் குறைவால் சாமானிய ஏழை, எளிய மக்களும், நடுத்தர மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சரிவில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டம் எங்கே? எப்போது திட்டமிடப்படும்? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.