கடற்கரையில் மீன் விற்க போலீஸார் தடை:  மீனவர்கள் எதிர்ப்பு 

எண்ணூர் கடற்கரையில் மீன் விற்பனை செய்ய புதன்கிழமை முதல் போலீஸார் தடை விதித்துள்ளனர்.  இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.     
கடற்கரையில் மீன் விற்க போலீஸார் தடை:  மீனவர்கள் எதிர்ப்பு 


திருவொற்றியூர்: எண்ணூர் கடற்கரையில் மீன் விற்பனை செய்ய புதன்கிழமை முதல் போலீஸார் தடை விதித்துள்ளனர்.  இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.     

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் மீன், இறைச்சி, காய்கறிகள், மளிகை உள்ளிட்ட பொருள்களை விற்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இக்கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் இவற்றை ஒதுக்குப்புறமான மைதானம் போன்ற பகுதிகளில் கடைகளை வைக்க போலீஸார் மற்றும் அந்தந்த உள்ளூர் நிர்வாகங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனையின் போது சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது. 

இதனைத்தொடர்ந்து மீன் அங்காடிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் செயல்பட்டுவந்த மீன் கடைகளை புதன்கிழமை எண்ணூர் போலீசார் அப்புறப்படுத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவ பெண்களிடமிருந்து மீன்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மீனவர்கள் கடும் எதிர்ப்பு:  இதுகுறித்து இப்பகுதி மீனவர்கள் கூறியது மீன் விற்பனைக்கு அரசு அனுமதி அளித்துள்ள போது போலீஸார் தன்னிச்சையாக நடப்பதும், கடும் நடவடிக்கை எடுப்பது அதிர்ச்சியாக உள்ளது. 
இதனால் மீனவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாய தொழில்களை போல மீன்பிடித் தொழிலை காப்பாற்றுவோம். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துமீறும் போலீஸாரை கண்டிக்க வேண்டும். 

சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் பொதுமக்களை போலீஸார் தான் கட்டுப்படுத்த வேண்டுமே தவிர நாங்கள் என்ன செய்ய முடியும். நாங்கள் சொல்லித் தான் பார்க்கிறோம். மேலும் மீன்களை பறிமுதல் செய்து எடுத்துச் செல்வது என்பதே அதிகார துஷ்பிரயோகம். மற்ற பகுதிகளில் இதுபோன்ற தடைகள் இல்லாத போது இங்கு மட்டும் மீன் விற்க போலீஸார் தடை விதிக்கின்றனர். அவர்களுக்கு அரசே தெளிவான வழிகாட்டுதல்களை அளித்தால் மட்டுமே மீனவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். போலீஸாரின் நடவடிக்கைகள் பொதுமக்களை துன்புறுத்தும் விதமாகவோ அல்லது அச்சுறுத்தும் விதமாகவோ இருக்கக்கூடாது என்றனர்.     

படுக்கை தொடரும்:   இதுகுறித்து என் ஒரு காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தியிடம் கேட்டபோது , மீன் விற்பனைக்கு என மீன் மார்க்கெட்டுகள் உள்ளன. அங்குதான் மீன் விற்க முடியும். எனவே ஊரடங்கு அமலில் உள்ள வரை கண்ட கண்ட இடங்களில் மீன் விற்பதை அனுமதிக்க முடியாது. பாரதியார் நகர் மீன் மார்க்கெட் என்பது அங்கீகரிக்கப்பட்ட மார்க்கெட் அல்ல. எனவேதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந் நடவடிக்கை தொடரும் என்றார் புகழேந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com