கும்மிடிப்பூண்டி அருகே மீள்குடியேற்றம் செய்யப்பட்ட 100 கூலி தொழிலாளர் குடும்பத்திற்கு நிவாரண உதவி

கும்மிடிப்பூண்டி அடுத்த சூரப்பூண்டி ஊராட்சி ராமசந்திராபுரம் பகுதியில் சென்னை திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி தாமரை   ஏரி பகுதியில் இருந்து மீள் குடியேற்றம் செய்யப்பட்ட 100 குடும்பத்தினருக்கு
கும்மிடிப்பூண்டி அருகே மீள்குடியேற்றம் செய்யப்பட்ட 100 கூலி தொழிலாளர் குடும்பத்திற்கு நிவாரண உதவி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சூரப்பூண்டி ஊராட்சி ராமசந்திராபுரம் பகுதியில் சென்னை திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி பகுதியில் இருந்து மீள் குடியேற்றம் செய்யப்பட்ட 100 குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் சூரப்பூண்டி ஊராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

சென்னை திருவொற்றியூரில் நீர் நிலைகளை ஆக்ரமித்த வந்தவர்கள், கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி கரையை ஆக்ரமித்து வீடு கட்டி வந்தவர்கள் என சுமார் 100 குடும்பத்தினர் அங்கிருந்து அகற்றப்பட்டு கும்மிடிப்பூண்டி அடுத்த சூரப்பூண்டி ஊராட்சி ராமச்சந்திராபுரத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

அரசு வழங்கிய பட்டா நிலத்தில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வரும் இவர்கள் சென்னை மற்றும் புறநகரில் மின்சார ரயில்களில் பிஸ்கெட், பூ, காய் கனிகளை விற்று பிழைப்பு நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கரோனா நோய் தொற்று காரணமாக தென்னக ரயில்வே அனைத்து ரயில்களையும் நிறுத்தி விட்டதாலும், நாடெங்கும் பின்பற்றப்படும் ஊரடங்கின் காரணமாகவும் இந்த 100 குடும்பத்தினரும் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டனர்.

இதை அறிந்த சூரப்பூண்டி ஊராட்சி தலைவர் வாணிஸ்ரீ பாலசுப்பிரமணியம் மேற்கண்ட குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, எண்ணை உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தார்.

தொடர்ந்து இந்த மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு  சூரப்பூண்டியில் ஊராட்சி தலைவர் வாணிஸ்ரீ பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், துணை தலைவர் மாலதி குணசேகரன், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஏ.என்.குமார், எகுமது ரை ஊராட்சி தலைவர் ஸ்ரீபிரியா மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரோஜா ரமேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் பங்கேற்று மேற்கண்ட 100 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி எந்த நேரத்தில் எந்த உதவி தேவைப்பட்டாலும் தன்னையோ, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவரையோ, ஊராட்சி தலைவரையோ தொடர்பு கொள்ள அறிவுறுத்தினார்.

நிகழ்வில் வட்ட வழங்கல் அலுவலர் ஜெயச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராமநிர்வாக அலுவலர்கள் ஜெயச்சந்திரன், ஜான் பிரிட்டோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com