தமிழகத்தில் கரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி: உயிரிழப்பு  11 ஆக உயர்வு

கரோனா நோய்த்தொற்றுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி ஞாயிக்கிழமை காலை உயிரிழந்தார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்


 
கரோனா நோய்த்தொற்றுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு (ஏப்.11) உயிரிழந்தார். 

தமிழகத்தில் இதுவரை 9,527 நபா்கள் கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களில் வெள்ளிக்கிழமை 911 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. சனிக்கிழமை புதிதாக 58 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 969-ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது. 485 நபா்களுக்கு விரைவில் முடிவுகள் வெளியாகும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு டாக்டர் அன்சாரி தெரு, 5வது தெருவைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு 7 ஆம் தேதி நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஓமந்தூர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்தவர் சனிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி   உயிரிழந்தார். இதனை சுகாதார ஆய்வாளர் மோகன்ராஜ் என்பவர் இன்று காலை 8 மணிக்கு உறுதி செய்தார். இதனால் தமிழகத்தில் 10 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com