ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றிய 4 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்: எஸ்.பி.சக்திகணேசன் தகவல்

கரோனா நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றிய 4 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்: எஸ்.பி.சக்திகணேசன் தகவல்
Updated on
1 min read


ஈரோடு: கரோனா நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இந்த தடை உத்தரவு இன்று 19 வது நாளாக அமலில் உள்ளது.

தடையுத்தரவு காலங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருவதை தவிர வேறு எங்கும் வெளியே தேவையில்லாமல் சுற்றக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில்  1450     போலீஸார், ஊர் காவல் படையினர் என மொத்தம் ஆயிரத்து 600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீஸார் முக்கியமான இடங்களில் தடுப்பு அமைத்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  வெளியே தேவையில்லாமல் இரு சக்கர வாகனங்களில்  சுற்றும் வாலிபர்களை முதலில் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.  ஆனால் ஒரு சிலர் வேண்டுமென்றே வெளியே சுற்றுவது வாடிக்கையாக வைத்திருந்தனர்.  

இதையடுத்து தேவையில்லாமல் வெளியே சுற்றுவார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எஸ்.பி உத்தரவிட்டதை அடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டு எமர்ஜென்சி என்றால் அனுப்பி வைக்கின்றனர். தேவையில்லாமல் வெளியே சுற்றும் வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர். மேலும் தொடர்ந்து தேவை இல்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வந்தனர். 

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறும்போது,  தற்போது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. கரோனாவை பொருத்தவரை சமூக இடைவெளி என்பது மிக முக்கியம் அதனால்தான் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர தேவையில்லாமல் வெளியே சுற்ற வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம்.  ஆனால் ஒரு சிலர தடை உத்தரவை பொருட்படுத்தாமல் வேண்டுமென்று வெளியே சுற்றி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் சுற்றிய 4 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மேலும் அடிக்கடி தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் கண்டறிந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை நேரங்களில் மக்கள் வெளியே வரத்தான் செய்வார்கள் அதை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பொருட்களை வாங்கி விட வேண்டும்.  பொருட்கள் வாங்கும்போது சமூக இடைவெளியை அவர்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்.

இதுகுறித்து அந்தந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் கண்காணித்து அவர்களுக்கு தேவையான அறிவுரை வழங்கி வருகிறார்கள். போலீஸாருக்கு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com