உலகம் முழுவதும் கரோனாவால் 1,08,854 பேர் பலி: பாதிப்பு 17,81,053 ஆக உயர்வு 

கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) உலகம் முழுவதும் பலியானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1 லட்சத்து 8 ஆயிரத்து 854 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவால் 1,08,854 பேர் பலி: பாதிப்பு 17,81,053 ஆக உயர்வு 
Updated on
1 min read

ஜெனிவா: கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) உலகம் முழுவதும் பலியானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1 லட்சத்து 8 ஆயிரத்து 854 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றுக்கு உலகம் முழுவதும் 17 லட்சத்து 81 ஆயிரத்து 53க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா நோய்த்தொற்றுக்கு உலகம் முழுவதும் பலியானவா்களின் எண்ணிக்கை ஞாயிக்கிழமை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி அந்த நோய் பாதிப்பால் 1.08 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். மேலும், உலகம் முழுவதும் 220-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் 17 லட்சத்து 81 ஆயிரத்து 53க்கும் மேற்பட்டவா்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தொற்று பாதிப்பில் இருந்து 4 லட்சத்து 4 ஆயிரத்து 554 பேர் குணடைந்துள்ளனர். 

உலகிலேயே இதுவரை மிக அதிகமாக அமெரிக்காவில் 20,580 பேர் உயிரிழந்தனர். பிரிட்டனில் சனிக்கிழமை ஒரே நாளில் 917 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 9875 ஆக உயர்ந்துள்ளது. பிரான்சில் 635 பேரும், இத்தாலில் 619 பேரும் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 19,468 ஆகவும், ஸ்பெயினில் 525 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 16,606 ஆகவும், ஜெர்மெனியில் 135 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2,871 ஆகவும் உயர்ந்துள்ளது. ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உயிரிழப்புகள் குறைந்து வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உயிரிழப்புகள் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. 

இந்த புள்ளி விவரம் நாடுகளின் அரசுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு தரும் தகவல்களின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் உண்மையிலேயே கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை, அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டதை விட மிகவும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பெரும்பாலான நாடுகளில் கரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் நன்கு தென்படுபவா்களுக்கு மட்டுமே, அந்த நோய் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உறுதிப்படுத்தப்படுகிறது.

ஆனால், அந்த நோய் பாதிப்பு ஏற்படும் எல்லோருக்குமே அதன் அறிகுறிகள் தென்படாது என்பதால், இத்தகைய புள்ளிவிவரங்கள் உண்மை நிலவரத்தை முழுமையாகப் பிரதிபலிப்பதாகக் கருத முடியாது என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com