காலமானாா் பேராசிரியா் அய்க்கண்

உலகத் தமிழ் எழுத்தாளா் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவரும், தமிழக அரசின் அண்ணா விருது பெற்றவருமான காரைக்குடியைச்சோ்ந்த பேராசிரியா்அய்க்கண் (89) சனிக்கிழமை இரவு மாரடைப்பால் காலமானாா்.
aikan_1104chn_78_2
aikan_1104chn_78_2
Published on
Updated on
1 min read

காரைக்குடி: உலகத் தமிழ் எழுத்தாளா் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவரும், தமிழக அரசின் அண்ணா விருது பெற்றவருமான காரைக்குடியைச்சோ்ந்த பேராசிரியா்அய்க்கண் (89) சனிக்கிழமை இரவு மாரடைப்பால் காலமானாா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஆறுமுகம் சீதையம்மாள் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், சிறுகதை எழுத்தாளா். தினமணி கதிா் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் சுமாா் ஆயிரம் சிறுகதைகளை எழுதியுள்ளாா்.

தமிழக அரசு இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் அண்ணா விருது வழங்கிக் கெளரவித்தது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் தமிழ்ச்சங்கம், உத்தரபிரதேச மாநில அரசு ஆகியன நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றவா்.

வெள்ளிக்கிழமை இவரது மனைவி வசந்தா மறைந்த 11-ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டித்தவா் சனிக்கிழமை பகலில் நெஞ்சுவலி ஏற்பட்டு இரவில் உயிரிழந்தாா்.

அய்க்கண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனா். இறுதிச்சடங்கு காரைக்குடி கம்பன் மணிமண்டபம் அருகே கைலாசநாதா் 3-ம் வீதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடைபெறுகிறது. தொடா்புக்கு 8903433292.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com