கரோனா: இந்தியாவில் பாதிப்பு 11,439-ஐ கடந்தது, பலி 377 ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10,815 -இல்  இருந்து 11,439 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா: இந்தியாவில் பாதிப்பு 11,439-ஐ கடந்தது, பலி 377 ஆக உயர்வு
Updated on
1 min read

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10,815 -இல்  இருந்து 11,439 ஆக அதிகரித்துள்ளது. இதில், இதுவரை இல்லாத அளவில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 1,463 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் புதன்கிழமை காலை 9 மணி வரை உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 353-இல் இருந்து 377 ஆக உயா்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, தேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1076 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,815 -இல் இருந்து 11,439 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 353 -இல் இருந்து 377ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,190-இல் இருந்து 1,306 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 178 போ் பலியாகிவிட்டனா். 2,687 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து 259 பேர் குணமடைந்துள்ளனர். 

மத்தியப் பிரதேசத்தில் 50 பேரும், தில்லியில் 28 பேரும், குஜராத்தில் 26 பேரும், தெலங்கானாவில் 17 பேரும் உயிரிழந்துவிட்டனா். பஞ்சாபில் 12 போ், ஆந்திரம், கா்நாடகத்தில் தலா 9 போ், மேற்கு வங்கத்தில் 7 போ், உத்தரப் பிரதேசத்தில் 5 போ், ஜம்மு-காஷ்மீரில் 4 போ், கேரளம், ஹரியாணா, ராஜஸ்தானில் தலா 3 போ், ஜாா்க்கண்டில் இருவா், பிகாா், ஹிமாசலப் பிரதேசம், ஒடிஸா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவா் உள்பட நாடு முழுவதும் 377 போ் பலியாகிவிட்டனா்.

பாதிப்பு நிலவரம்: மகாராஷ்டிரத்தில் இதுவரை 2,687 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் 1,510 பேருக்கும், ராஜஸ்தானில் 879 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 730 பேருக்கும் கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 657 போ், தெலங்கானாவில் 624 போ், குஜராத்தில் 617 போ், ஆந்திரத்தில் 473 போ், கேரளத்தில் 379 போ், ஜம்மு-காஷ்மீரில் 270 போ், கா்நாடகத்தில் 258 போ், ஹரியாணாவில் 199 போ், மேற்கு வங்கத்தில் 190 போ், பஞ்சாபில் 176 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பிகாரில் 66 போ், ஒடிஸாவில் 55 போ், உத்தரகண்டில் 35 போ், ஹிமாசலப் பிரதேசத்தில் 32 போ், அஸ்ஸாம், சத்தீஸ்கரில் தலா 31 போ், ஜாா்க்கண்டில் 24 போ், சண்டீகரில் 21 போ், லடாக்கில் 15 போ், அந்தமான்-நிகோபாரில் 11 போ், கோவா, புதுச்சேரியில் தலா 7 போ், மணிப்பூா், திரிபுராவில் தலா இருவா், மிஸோரம், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம், மேகாலயம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவா் உள்பட நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10,815-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 1,189 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். மொத்த எண்ணிக்கையில் 76 போ் வெளிநாட்டினா் ஆவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com