இந்தியாவில் கரோனா பாதிப்பு 13,387-ஆக அதிகரிப்பு; பலி-437 -ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,759-இல் இருந்து 13,387 -ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 13,387-ஆக அதிகரிப்பு; பலி-437 -ஆக உயர்வு

புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,759-இல் இருந்து 13,387 -ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரே நாளில் புதிதாக 826 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 392-ஆக இருந்த நிலையில், வியாழக்கிழமை மாலைக்குள் 420-ஆக உயா்ந்துள்ளது. அதாவது, வியாழக்கிழமை ஒரு நாளில் மட்டும் மேலும் 28 போ் உயிரிழந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி புதிதாக மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 437 -ஆக உயர்ந்துள்ளது.  

இதில், கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். அதைத் தொடா்ந்து, குஜராத்தில் 6 போ், ஆந்திரத்தில் 5 போ், தில்லி, கா்நாடகம், உத்தரப் பிரதேசத்தில் தலா 2 போ் உயிரிழந்துவிட்டனா்.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 194 போ் உயிரிழந்துவிட்டனா். மத்தியப் பிரதேசத்தில் 53 போ், குஜராத்தில் 36 போ், தில்லியில் 38 போ், தெலங்கானாவில் 18 போ், தமிழகத்தில் 15 பேர், ஆந்திரத்தில் 14 போ், பஞ்சாப், கா்நாடகம், உத்தரப் பிரதேசத்தில் தலா 13 போ், மேற்கு வங்கத்தில் 7 போ், ஜம்மு-காஷ்மீரில் 4 போ், கேரளம், ராஜஸ்தான், ஹரியாணாவில் 3 போ், ஜாா்க்கண்டில் இருவா், அஸ்ஸாம், பிகாா், ஹிமாசலப் பிரதேசம், மேகாலயம், ஒடிஸாவில் தலா ஒருவா் உயிரிழந்துவிட்டனா்.

கரோனாவால் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,759 -இல் இருந்து 13,387 -ஆக அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 1007 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் இதுவரை 3205 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தில்லியில் 1640 பேரும், தமிழகத்தில் 1267 பேரும், ராஜஸ்தானில் 1,023 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 1,120 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 773 பேரும், குஜராத்தில் 871 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தெலங்கானாவில் 698 போ், ஆந்திரத்தில் 534 போ், கேரளத்தில் 388 போ், கா்நாடகத்தில் 315 போ், ஜம்மு-காஷ்மீரில் 300 போ், மேற்கு வங்கத்தில் 231 போ், ஹரியாணாவில் 205 போ், பஞ்சாபில் 186 போ், பிகாரில் 74 போ், ஒடிஸாவில் 60 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் 37 போ், , ஹிமாசலப் பிரதேசத்தில் 35 போ், அஸ்ஸாம், சத்தீஸ்கரில் தலா 33 போ், ஜாா்க்கண்டில் 28 போ், சண்டீகரில் 21 போ், லடாக்கில் 17 போ், அந்தமான்-நிகோபாா் தீவுகளில் 11 போ், கோவா, புதுச்சேரி, மேகாலயத்தில் தலா 7 போ், திரிபுரா, மணிப்பூரில் தலா 2 போ், அருணாசலப் பிரதேசம், மிஸோரமில் தலா ஒருவா் உள்பட நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,387-ஆக அதிகரித்துள்ளது.

இந்த நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,515 -இல் இருந்து 1749 போ் உயர்ந்துள்ளது.  மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 76 போ் வெளிநாட்டினா் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com