முகக்கவசங்கள் தைத்துக் கொடுக்கும் குடியரசுத் தலைவர் மனைவி!

இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மனைவி சவீதா கோவிந்த், கரோனா தடுப்பு நடவடிக்கையாக
முகக்கவசங்கள் தைத்துக் கொடுக்கும் குடியரசுத் தலைவர் மனைவி!
Published on
Updated on
1 min read


புதுதில்லி: இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மனைவி சவீதா கோவிந்த், கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆதரவற்றோர் முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு தைத்து கொடுத்து வருகிறார். இதுதொடர்பான புகைப்படத்தில் சவீதா கோவிந்த் சிவப்பு நிற துணியால் தைக்கப்பட்ட முகக்கவச்சை அணிந்துள்ளார். 

உலக முழுவதும் பரவி வரும் கரோனா நோயத்தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக தலைநகர் தில்லியில் உள்ள பல்வேறு ஆதரவற்றோர் முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையில் முகக்கவசங்களை தைத்து கொடுக்கிறார் சவீதா கோவிந்த். 

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள ஒரு பகுதியில் தினமும் காலை முதல் மாலை வரை தையல் இயந்திரத்தில் அமர்ந்து தனது கையாலே முகக்கவசங்களை தைத்து வருகிறார்.  முகக்கவசங்களை தைத்துக்கொடுப்பதன் மூலம், அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவுக்கு எதிராக போராடலாம் என்பதை வலியுறுத்தியுள்ளார். 

குடியரசுத் தலைவரின் மனைவியே கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்ட களத்தில் பணி செய்வது  அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது. மேலும் சவீதா கோவிந்த் தனது முகத்தை சிவப்பு துணியால் ஆன முகக்கவசத்தை அணிந்துகொண்டு தையல் இயந்திரத்தில் அமர்ந்து முகக்கவசங்கள் தைக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சமீபத்தில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த வழிகாட்டுதல்களின் படி, அனைவரும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவித்திருந்தது. முகக்கவசங்களை அணிவது மட்டுமல்லாமல், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை கழுவுதல் மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். 

இதற்கிடையில், இந்தியாவில் 21,791 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை 681 பேர் உயிரிழந்துள்ளனர். 4,258 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுபோன்ற நேரத்தில், துணியாலான முகக்கவசங்கள், மூன்றடுக்கு அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் மற்றும் என்95 முகக்கவசங்கள் உள்ளிட்டவை பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com