இந்தியாவில் கரோனா பாதிப்பு 31,332; பலி 1,007-ஆக உயர்வு

நமது நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29,974 -இல் இருந்து 31,332 -ஆக அதிகரித்துள்ளது. அந்த நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 937- இல் இருந்து 1007-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 31,332; பலி 1,007-ஆக உயர்வு


புது தில்லி: நமது நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29,974 -இல் இருந்து 31,332 -ஆக அதிகரித்துள்ளது. அந்த நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 937- இல் இருந்து 1007-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,026-இல் இருந்து 7,696-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,897 பேருக்கு  கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,332 ஆக அதிகரித்துள்ளது. 22,629 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 7,696 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 73 பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளதை அடுத்து தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,007 -ஆக உயர்ந்துள்ளது. 

இதில், மகாராஷ்டிரத்தில் மட்டும் அதிகபட்சமாக 400 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு அடுத்து குஜராத்தில் 181 பேரும், ராஜஸ்தானில் 51 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 120 பேரும், ஜம்மு-காஷ்மீரில் ஒருவரும் உயிரிழந்துவிட்டனா்.

பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 9,318 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். குஜராத்தில் 3,774 பேரும், தில்லியில் 3,314 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 2,387 பேரும், ராஜஸ்தானில் 2,364 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 2,053 பேரும், ஆந்திரத்தில் 1,259 பேரும், தெலங்கானாவில் 1,004 பேரும், மேற்கு வங்கத்தில் 725 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 565 பேரும், கா்நாடகத்தில் 523 பேரும், கேரளத்தில் 485 பேரும், பிகாரில் 366 பேரும், பஞ்சாபில் 322 பேரும், தமிழகம் - 2,058 பேரும், ஹரியாணாவில் 219 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com