மெக்காவில் சமூக இடைவெளியுடன் சுற்றிய ஹஜ் பயணிகள்

கரோனா வைரஸ் தொற்று காரணமாக மெக்காவில் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. குறைந்த அளவிலான யாத்ரீகர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தினர்.
மெக்காவில் சமூக இடைவெளியுடன் சுற்றிய ஹஜ் பயணிகள்
மெக்காவில் சமூக இடைவெளியுடன் சுற்றிய ஹஜ் பயணிகள்
Published on
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்று காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. குறைந்த அளவிலான யாத்ரீகர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தினர்.

அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் உள்ள இலாமியர்களின் புனித தலமான மெக்கா மற்றும் மெதினாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ஹஜ் பயணிகள் வருகை புரிவது வழங்கமாக உள்ளது. எனினும் இந்த ஆண்டு கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இப்பகுதிக்கு வரும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு ரமலான் பண்டிகையில் உள்ளூர் யாத்ரீகர்கள் மட்டுமே சமூக இடைவெளியுடன் மெக்காவில் கூடி தொழுகை நடத்தினர்.

மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் முகக்கவசம் அணிந்து கைகளில் குடைகளை பிடித்தவாறு காபாவை சுற்றிவர அனுமதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே குழுக்களாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களை கண்காணிக்க சுகாதாரக் குழுவும் அமைக்கப்பட்டது.

மெக்கா மசூதியை பராமரிப்பதற்காக 3500 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு 54 ஆயிரம் லிட்டர் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. வழக்கமாக ஒருநாளில் மூன்று முறை மசூதி தூய்மை பணிகள் நடைபெறும் நிலையில், தற்போது 10 முறை சுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com