சுஷாந்தின் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பெரும் தொகை : பிகார் டி.ஜி.பி கேள்வி

சுஷாந்த் சிங் வங்கி கணக்கிலிருந்து ரூ. 50 கோடி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மும்பை காவல்துறை இதைப் பற்றி ஏன் விசாரிக்கவில்லை என பிகார் காவல்துறை இயக்குனர் குப்தேஷ்வர் பாண்டே கேள்வி எழுப்பியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சுஷாந்த் சிங் வங்கி கணக்கிலிருந்து ரூ. 50 கோடி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மும்பை காவல்துறை இதைப் பற்றி ஏன் விசாரிக்கவில்லை என பிகார் காவல்துறை இயக்குனர் குப்தேஷ்வர் பாண்டே கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பிகார் காவல்துறை இயக்குனர் குப்தேஷ்வர் பாண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கிற்கு இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 50 கோடி ரூபாய் வந்துள்ளது. ஆனால் ஆச்சரியப்படும் விதமாக அவை அனைத்தும் அவரது கணக்கில் இருந்து வெளியில் சென்றுள்ளது. இது குறித்து தற்போது வரை மும்பை காவல் துறை விசாரணை நடத்தவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாரங்களை திரட்டச் சென்ற காவல் கண்காணிப்பாளர் தர வரிசை அதிகாரியிடம் ஆதாரங்கள், பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கைகளை ஒப்படைப்பதற்கு பதிலாக மும்பை காவல் துறையினர் தனிமைப்படுத்தல் என்னும் பெயரில் எங்கள் அதிகாரியை கிட்டத்திட்ட வீட்டு சிறையில் வைப்பது போல் வைத்துள்ளார்கள். 

வேறு எந்த மாநில காவல்துறையினரும் இதுபோன்ற ஒத்துழைப்பை கொடுத்து நான் பார்த்ததில்லை. மும்பை காவல்துறையிடம் நேர்மையான அனுகுமுறை இருந்தால், அவர்கள் எங்களுடன் விசாரணையை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

தற்கொலை வழக்கில் சுஷாந்தின் காதலி ரியாவிற்கு பங்கு இருக்கிறது என பாட்னாவில் சுஷாந்தின் தந்தை புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகையால், தற்போது ரியா ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் என்பதை அனைவருக்கும் நினைவூட்டுகிறேன். நாங்கள் அவருக்கு எதிராக ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். போதுமான ஆதாரங்கள் எங்கள் காவல்துறை அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டால், நாங்கள் அவரைக் கைது செய்வோம். 

நிச்சயமாக நாங்கள் எங்கள் விசாரணையில் வெளிப்படையாக இருப்போம். எங்கள் காவல்துறை அதிகாரி மும்பையில் உள்ளார். அவர் உண்மைகளையும் ஆதாரங்களையும் தோண்டி எடுப்பார் என்று பாண்டே தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மும்பை காவல்துறை ஆணையர் பரம் பிர் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இதுவரை 56 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com