வட்டியில்லா வங்கி கடன் கேட்டு திருச்செங்கோட்டில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் 

வட்டியில்லா வங்கி கடன் கேட்டு திருச்செங்கோட்டில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் 

வங்கியில் வட்டியில்லா கடன் கேட்டும் மற்றும் பல கோரிக்கைகளை நீதித்துறை, தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
Published on


திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் இன்று  புதன்கிழமை திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு காலை 10 மணிக்கு, வங்கியில் வட்டியில்லா கடன் கேட்டும் மற்றும் பல கோரிக்கைகளை நீதித்துறை, தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்குரைஞர்கள் சங்கங்களுடன் ஆலோசித்து மருத்துவ பாதுகாப்புடன் திறந்த நீதிமன்ற விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கரோனா கால ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வழக்குரைஞர்களுக்கு வங்கியில் வட்டியில்லா கடனாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்.  வழக்குரைஞர்களுக்கு கரோனா கால நிதி உதவிக்கு தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு ரூ.50 கோடி தமிழக அரசு வழங்க வலியுறுத்தியும்  மற்றும்  மத்திய  அரசு கொண்டு வரும் குற்றவியல் சட்டங்களில் திருத்தும் செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைத்திட வேண்டும். மக்களை பாதிக்கும் புதிய சட்ட திருத்தங்களை வாபஸ் வாங்க கோரியும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர்  சி.பரணீதரன்  தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த வழக்குரைஞர்கள் எஸ்.பாலசுப்ரமணியன் , சி.கோவிந்தராஜ், வி.பாபு  ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட செயலாளரும்,  திருச்செங்கோடு வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். சேகரன் கோரிக்கைகளை முன்வைத்து சிறப்புரையாற்றினார். இதில் வழக்குரைஞர்கள்  மோதிலால், கண்ணன், பி.எம்.குணசேகரன்,  ஆர்.என்.முருகேசன், பூபதி மற்றும் பெண் வழக்குரைஞர்கள் பவானி, சுகன்யா, சம்பூரணம், நித்யா உட்பட  பல வழக்குரைஞர்கள் கலந்துகொண்டார்கள். இறுதியாக  சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.கோபி நன்றியுரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com