ஈரோட்டில் காய்கறி மார்க்கெட் இன்று முதல் 12 மணி வரை செயல்பட அனுமதி

ஆகஸ்ட் மாதம் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு தளர்வு இல்லாத ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் வ.உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் சனிக்கிழமை மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ள
ஈரோட்டில் காய்கறி மார்க்கெட் இன்று முதல் 12 மணி வரை செயல்பட அனுமதி


ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ஈரோடு ஆர்கேவி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் ஈரோடு பஸ் நிலையத்தில்  தற்காலிகமாக செயல்பட்டு வந்தது பின்னர் காய்கறி மார்க்கெட் கடந்த ஜூன் 4ஆம் தேதி முதல் ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வருகிறது  ரூ.1 கோடி மதிப்பில் 700க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டன. இங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மொத்த வியாபாரமும் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை சில்லரை வியாபாரமும் நடந்து வருகிறது. 

இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு தளர்வு இல்லாத ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் வ.உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் சனிக்கிழமை மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. மேலும் திங்கள்கிழமை அன்றும் மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது காலை 9 மணிக்கு உள்ளாகவே காய்கறிகள் வாங்க வேண்டும் என்பதற்காக பெண்கள் அவசர அவசரமாக மார்க்கெட்டிற்கு வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி புதிய முடிவை எடுத்துள்ளது.  

அதன்படி இன்று முதல் மார்க்கெட் காலை 12 மணி வரை செயல்பட அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு பேனர் நுழைவாயில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு வியாபாரிகளும் பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் .   

இதுகுறித்து இன்று காய்கறி வாங்க வந்த பெண் ஒருவர் கூறும்போது, நான் வாரத்திற்கு ஒரு முறை காய்கறி மார்க்கெட்டுக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கிச் செல்வேன் இங்கு காய்கறி விலை மற்ற இடங்களைக் காட்டிலும் மலிவாக கிடைப்பதால் எங்களைப் போன்ற நடுத்தர குடும்ப பெண்கள் அதிகளவில் வருகின்றனர். ஆனால் காலை 9 மணி வரை மட்டுமே காய்கறி வாங்க அனுமதி இருந்ததால் காலையில் வேகமாக எழுந்து அவசர அவசரமாக வீட்டு வேலையை முடித்துவிட்டு இங்கு காய்கறி வாங்க வருவேன். ஆனால் இன்று முதல் 12 மணி வரை வியாபாரம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இது நல்ல விஷயம் தான். இனிமேல் நான் வீட்டு வேலையை முடித்துவிட்டு மெதுவாக காய்கறிகளை வாங்கி செல்வேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com