

நாட்டின் 74வது சுதந்திர தின விழா புதுக்கோட்டை சேமப்படை திடலில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு அரசுத் துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றிய 457 அரசுப் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே. சரவணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விழாவைத் தொடர்ந்து, புதுக்கோட்டை நிஜாம் குடியிருப்பில் வசிக்கும் விடுதலைப் போராட்ட தியாகியின் வாரிசு நாகப்பனின் வீட்டுக்கு நேரில் சென்ற ஆட்சியர், அவரை சிறப்பு செய்து வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோல அந்தந்தப் பகுதி கோட்டாட்சியர்கள் அவரவர் பகுதிக்குள்பட்ட 25 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று சிறப்பு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.