

கரோனா தொற்று முழுவதுமாக குறையும் வரை புதுதில்லியில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுதில்லி தலைமை செயலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
சுதந்திர தின உரையில் அவர் பேசுகையில், தேசிய தலைநகரான புதுதில்லியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளது. இந்த தொற்றை கட்டுப்படுத்த போராடிய முன்கள வீரர்கள் அனைவருக்கும் நன்றி.
ஆம் ஆத்மி அரசுக்கு பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பும், ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. மக்கள் தரப்பில் இருந்து தற்போதைக்கு பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்று கருத்து எழுந்துள்ளது.
உங்கள் குழந்தைகளை பாதுகாப்போம் என அரசு உறுதியளிக்கிறது. கரோனா தொற்று முழுவதுமாக குறையும் வரை பள்ளிகள் திறக்க போவதில்லை.
டெல்லியின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறினார்.
இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக புதுதில்லி அரசின் சுதந்திர தின விழா சத்ராசல் மைதானத்திற்கு பதில் தலைமைச் செயலகத்தில் கொண்டாடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.