திருச்சி: சுதந்திர தினத்தையொட்டி ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி மரியாதை

சுதந்திர தினத்தையொட்டி ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி மரியாதைதிருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
திருச்சி: சுதந்திர தினத்தையொட்டி ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி மரியாதை
Updated on
1 min read

திருச்சி: சுதந்திர தினத்தையொட்டி ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி மரியாதை
திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்  சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

திருச்சி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ அலுவலர்கள், ஆய்வக பணியாளர்கள், சித்த மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 98 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கினார். தியாகிகள் 10 பேருக்கு அவரவர் வீடு தேடி சென்று ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com