இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தல்: 80 மணல் மூட்டைகள், 3 வாகனங்கள் பறிமுதல்

இருசக்கர வாகனங்களில் மணல் கடத்த பயன்படுத்திய 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 80 மணல் மூட்டைகளையும் நகர் காவல் நிலைய காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமைஅதிகாலை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட  மணல் மூட்டைகள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமைஅதிகாலை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட  மணல் மூட்டைகள்.


ஸ்ரீவில்லிபுத்தூர்: இருசக்கர வாகனங்களில் மணல் கடத்த பயன்படுத்திய 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 80 மணல் மூட்டைகளையும் நகர் காவல் நிலைய காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக மணலை அள்ளி அதனை மூட்டைகளாக கட்டி கடத்தி வரப்படுவதாக சிவகாசி துணை ஆட்சியர் தினேஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் வருவாய் ஆய்வாளர் பால்துரை ஆகியோருக்கு மணல் மூட்டைகள் கடத்துபவர்களை பிடிக்க துணையர் ஆட்சியர் உத்தரவிட்டார்

அந்த உத்தரவின் பேரில் வட்டாட்சியர் சரவணன் வருவாய் ஆய்வாளர் பால் பால்துரை குழுவினர் இன்று அதிகாலை 3 மணி அளவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பதுங்கியிருந்து இருசக்கர வாகனங்களில் மணல் மூட்டைகளை யாராவது கடத்தி வருகிறார்களா என கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் சுமார் ஏழு இருசக்கர வாகனங்களில் வாலிபர்கள் மணல்  மூடைகள் கடத்தி வேகமாக வந்து கொண்டிருந்தனர் அதிகாரிகள் குழுவினர் பார்த்தவுடன் அனைவரும் தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்

மூன்று இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து சுமார் எண்பது மணல் மூடைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

மேலும் மூன்று இருசக்கர வாகனங்களையும் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தி அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமார் 7 பேர் மீது புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் நகர் காவல்நிலைய காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு மணல் மூடைகள் ஆக்கி கடத்தி வரப்பட்டு கட்டடம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 மூட்டைகளை வருவாய்த்துறை பறிமுதல் செய்து இருந்த நிலையில் தற்போது 80 மூட்டைகள் அதிகாலையில் பிடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

துணை ஆடிசியர் தினேஷ்குமார் கூறும்போது மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com