44 வந்தே பாரத் விரைவு ரயில் பெட்டிகள் தயாரிப்புக்கான டெண்டர் ரத்து: இந்திய ரயில்வே  

44  வந்தே பாரத் விரைவு ரயில்களுக்கான பெட்டிகளை தயாரிப்பதற்கு விடப்பட்ட சர்வதேச டெண்டரை ரத்து செய்துள்ளது  இந்திய ரயில்வே வாரியம். 
மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில்
மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில்



புதுதில்லி: 44  வந்தே பாரத் விரைவு ரயில்களுக்கான பெட்டிகளை தயாரிப்பதற்கு விடப்பட்ட சர்வதேச டெண்டரை ரத்து செய்துள்ளது  இந்திய ரயில்வே வாரியம். 

இதுதொடர்பாக இந்திய ரயில்வே அமைச்சகம் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "44 வந்தே பாரத் விரைவு ரயில்களுக்கான ரயில்பெட்டிகளை தயாரிக்க விடுக்கப்பட்டிருந்த சர்வதேச டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. மேக் இன் இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து திருத்தப்பட்ட பொதுகொள்முதல் விதிகளின்படி அடுத்த ஒரு வாரத்திற்குள் புதிய டெண்டர் விடுக்கப்படும்" என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சர்வதேச டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்மாக தெரிவிக்கவில்லை. 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி 16 பெட்டிகள் கொண்ட 44 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க சர்வதேச டெண்டரை சென்னை ஐசிஎஃப் வெளியிட்டது. 

இதில் சில இந்திய நிறுவனங்கள் பங்கேற்றன. ஆனால், சர்வதேச அளவில் ஒரே ஒரு சீனாவை தலைமையாக கொண்டு செயல்பட்டு வரும் கூட்டு நிறுவனமான சி.ஆர்.ஆர்.சி எலக்ட்ரானிக்ஸ் மட்டுமே பங்கேற்றது. சீன கூட்டு நிறுவனம் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்புக்கான டெண்டரை கைப்பற்ற முயற்சித்ததை அரசு விரும்பாததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெண்டரில் மற்ற நிறுவனங்களில் பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஹெச்எல்), மேதா சர்வோ டிரைவ் பிரைவேட் லிமிடெட், பவர்நெட்டிக்ஸ் எக்குயிப்மெண்ட் இந்தியா பிரேவைட் லிமிடெட் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களும் அடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஜூன் 15 ஆம் தேதி கிழக்கு லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே கடுமையான மோதல்போக்கு நிலவி வருகிறது. 

மேலும், சீன பொருள்கள் மீது மக்களிடையே நிலவிய அதிருப்தியை அடுத்து இந்தியா-சீனா இடையே கடுமையான மோதல்போக்கு நிலவி வருகிறது. சீனா மீது இந்தியா பல்வேறு வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும் டிக்டாக் உள்ளிட்ட 105 சீன நிறுவனங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com