கார்பன் உமிழ்வு 8 சதவீதம் குறையும் - சுற்றுச்சூழல் அமைச்சக மூத்த அதிகாரி

கரோனா தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் கார்பன் உமிழ்வு இந்த ஆண்டு 8 சதவீதம் வரை குறையும் என்று சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத் துறையின் இணைச் செயலாளர் சுஜித் குமார் பாஜ்பாய்
மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத் துறையின் இணைச் செயலாளர் சுஜித் குமார் பாஜ்பாய்

கரோனா தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் கார்பன் உமிழ்வு இந்த ஆண்டு 8 சதவீதம் வரை குறையும் என்று சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக மையம் ஒருங்கிணைத்த ''வணிக நிலைத்தன்மையின் முன்னுதாரண மாற்றம் - கரோனாவிற்கு பின் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத் துறையின் இணைச் செயலாளர் சுஜித் குமார் பாஜ்பாய் கலந்து கொண்டு பேசினார்.

இந்த கருத்தரங்கில் அவர் பேசியது, கரோனா பேரிடர் மிகப்பெரிய சாவல்களை நமக்கு அளித்துள்ளது. பொருளாதாரத்தை தொடங்குவதற்கும், புதிய திட்டங்களை உருவாக்கி பொருளாதாரத்தை, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழலில் கவனம் செலுத்துவதற்கும் ஒரு வாய்ப்பு அளித்துள்ளது.

நமது அன்றாட வாழ்வில், நம்மைச் சுற்றி உள்ள இயற்கை மற்றும் மற்ற உயிரினங்களும் வாழ்ந்து வருவதை நாம் உணர வேண்டும். 

இந்தியா முழுவதும் கரோனாவால் ஏற்பட்ட பொதுமுடக்கத்தால் கார்பன் உமிழ்வானது இந்த ஆண்டு 8 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளை உருவாக்க வனத்தில் இருக்கும் மண், சுத்தமான நீர், நிலையான காலநிலையை அழித்து வருகின்றோம். வனத்தில் வாழும் பல உயிரினங்களை அழித்து வருகின்றோம். சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குலைத்துள்ளோம்.

காலநிலை மாற்றம் மற்றும் தொற்றுநோய் ஆகியவை மானுடவியல் செயல்பாடுகளுடன் தொடர்புடையவை ஆகும்.

மேலும், நமது வணிக அமைப்பை மாற்றி, எதிர்காலத்தினரிடம் சுற்றுச்சூழலை ஒப்படைக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com