கொல்கத்தாவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி
கொல்கத்தா பெலியகட்டா பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் வயதான பெண் ஒருவர் பலியானார்.


கொல்கத்தா பெலியகட்டா பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் வயதான பெண் ஒருவர் பலியானார்.
பெலியகட்டா பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் 70 வயதுடைய பெண், அவரது மகன் மற்றும் பேரன் வசித்து வந்தனர்.
கொல்கத்தாவில் கனமழை பெய்து வரும் நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில், பலத்த காயமடைந்த முதிய பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும், அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...