‘பசுவதை தடைச் சட்ட மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும்’: சித்தராமையா

பசுவதை தடைச் சட்ட மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

பசுவதை தடைச் சட்ட மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

2010-ஆம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக இருந்த போது கா்நாடக பசுவதை தடைச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தாா். அப்போது ஆளுநராக இருந்த பரத்வாஜ், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்திருந்தாா்.

அந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தாா். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, பசுவதை தடைச் சட்ட மசோதாவை திரும்பப்பெற்றது. 1964-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பசுவதை தடைச் சட்டம்தான் அமலில் உள்ளது.

இந்நிலையில் டிச.7-ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை குளிா்காலக் கூட்டத் தொடரில் பசுவதை தடைச் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் பிரபு சௌஹான் திட்டமிட்டுள்ளாா்.

இதனையடுத்து, கர்நாடக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தராமையா வெளியிட்ட செய்தியில்,

“பசுவதை தடைச் சட்டத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தால் காங்கிரஸ் கட்சி எதிர்க்கும். இச்சட்டத்தால் மாட்டிறைச்சி தொழிலை நம்பியுள்ளவர்கள் அனைவரும் வேலையை இழக்க நேரிடும். இவர்கள் தாக்கல் செய்யும் இந்த மசோதா ஆர்.எஸ்.எஸ். தயாரித்தது.” என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com