தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

கேரளத்தில் 1,850 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் ஆணையம்

கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் 1,850 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image

தேர்தல் ஆணையம்

Updated On :4 டிசம்பர் 2020, 11:45 am

கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் 1,850 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் முழுவதும் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. முதற்கட்டமாக டிசம்பர் 8 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக டிசம்பர் 10 ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக டிசம்பர் 14 ஆம் தேதியும் வாக்குப் பதிவுகள் நடக்கவுள்ளது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 16ஆம் தேதி நடத்தபடவுள்ளது.

இதனையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து பதட்டமான வாக்குச்சாவடிகளாக 1,850 வாக்குச் சாவடிகளை வகைப்படுத்தியுள்ளனர்.

அதில், அதிகபட்சமாக கண்ணூர் மாவட்டத்தில் 785 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக பதானம்திட்டா மாவட்டத்தில் 5 வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் நூற்றுக்கும் அதிகமான பதட்டமான வாக்குச்சாவடிகளைக் கொண்ட மாவட்டங்களாக திருவனந்தபுரம் (180), மலப்புரம் (100), கோழிக்கோடு (120), பாலக்காடு (182) மற்றும் காசராகோடு (100), வயநாடு (152) உள்ளன.

இதனைத் தொடர்ந்து பதட்டமானாதாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின் போது விடியோ பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.