நோக்கியாவின் ‘ப்யூர் புக்’ மடிக்கணினிகள்: இந்தியாவில் விரைவில் அறிமுகம்

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான நோக்கிய ‘ப்யூர் புக்’ என்றழைக்கப்படும் மடிக்கணினி மாதிரிகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
நோக்கிய
நோக்கிய

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான நோக்கிய ‘ப்யூர் புக்’ என்றழைக்கப்படும் மடிக்கணினி மாதிரிகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

நோக்கியா நிறுவனம் சமீபத்தில் ஸ்மார்ட் டிவி தயாரிப்பு பிரிவில் நுழைந்த நிலையில், தற்போது மடிக்கணினிகள் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது.

புதிதாக வெளிவரவிருக்கும் ‘ப்யூர் புக்’ மாதிரிகள் குறித்து நோக்கியா நிறுவனம், இதுவரை எந்தவொரு விவரக்குறிப்புகள், வெளியீட்டு தேதி அல்லது எந்த விலை தகவலையும் வெளியிடவில்லை.

கடந்த இரு வாரங்களுக்கு முன் நோக்கியா நிறுவனம், 9 மடிக்கணினி மாதிரிகள் இந்திய தர நிர்ணய பணியகத்தின் தரச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. 

நோக்கியா நிறுவனம் மொத்தமாக 9 மாதிரிகளையும் வெளியிடுமா அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிடுமா எனத் தெரியவில்லை. 

அந்த 9 மாதிரிகள் NKi510UL82S, NKi510UL85S, NKi510UL165S, NKi510UL810S, NKi510UL1610S, NKi310UL41S, NKi310UL42S, NKi310UL82S மற்றும் NKi310UL85S என்ற எண்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாதிரி எண்ணில் உள்ள 'என்.கே' பகுதி நோக்கியா நிறுவனத்தையும், பின்வரும் எழுத்து-எண் பகுதி செயலியையும் குறிக்கிறது என்று கூறப்படுகிறது.

சான்றளிக்கப்பட்ட ஒன்பது மாதிரிகளில், ஐந்து மாதிரிகளுக்கு இன்டெல் கோர்-ஐ 5,  நான்கு மாதிரிகளுக்கு இன்டெல் கோர்-ஐ 3 பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com