கேரள உள்ளாட்சித் தேர்தல்: இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி

கேரளத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கேரள உள்ளாட்சித் தேர்தல்: இடதுசாரி முன்னணி வெற்றி
கேரள உள்ளாட்சித் தேர்தல்: இடதுசாரி முன்னணி வெற்றி
Updated on
1 min read

கேரளத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கேரளத்தின் 14 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் 76.63 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதில் கடந்த டிச.8-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகின. டிச.10-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தோ்தலில் 76.78 சதவீதம் வாக்குகள் பதிவாகின. டிச.14-ஆம் தேதி நடைபெற்ற இறுதிகட்ட தேர்தலில் 78.62 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது, புதன்கிழமை காலை தொடங்கியதிலிருந்து ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி முன்னிலை பெற்று வந்தது.

வாக்கு எண்ணிக்கை முடிவில், இடதுசாரி ஜனநாயக முன்னணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகள்:

 கிராம ஊராட்சிஊராட்சி ஒன்றியங்கள்மாவட்ட ஊராட்சிநகராட்சிமாநகராட்சி
இடதுசாரி ஜனநாயக முன்னணி51410810353
ஐக்கிய ஜனநாயக முன்னணி375444453
தேசிய முற்போக்கு கூட்டணி230020
மற்றவை
 
290040
மொத்தம்94115214866

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com