ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இஸ்ரேலில் 3வது முறையாக பொதுமுடக்கம்

இஸ்ரேல் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்றாவது முறையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 11:13 am

ANI

இஸ்ரேல் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்றாவது முறையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

இஸ்ரேலில் இதுவரை கரோனாவால் மொத்தம் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், கரோனா பரவலை தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்போவதாக பிரதமர் பெஞ்சமின்  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்,

“கரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் குறைந்தது 2 வார காலத்திற்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும். நோய் பரவுவதில் குறிப்பிடத்தக்க சரிவு இல்லாதிருந்தால், கூடுதலாக 14 நாள்கள் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்.

இஸ்ரேலில் ஏற்கனவே இந்த ஆண்டில் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்தில் இரண்டு முறை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது தொற்றின் பரவல் வெகுவாக குறைந்தது. பொதுமுடக்கத்தை தளர்த்திய பிறகு தற்போது மீண்டும் பரவல் அதிகரித்து வருகின்றது. ஆகையால் மூன்றாவது முறையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.” எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.