முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

மும்பையில் ஜன.15 வரை பள்ளிகள் திறக்கப்படாது: மாநகராட்சி

மும்பையில் ஜனவரி 15-ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என மும்பை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :29 டிசம்பர் 2020, 2:18 pm

ANI

மும்பையில் ஜனவரி 15-ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என மும்பை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

கரோனா நோய்ப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டது. 

தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால் அந்தந்த மாநிலங்களின் சூழலுக்கு ஏற்ப பள்ளிகளை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் தொற்று பரவல் குறைந்த பகுதிகளான புணே போன்ற மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

இருப்பினும், மும்பையில் முழுவதுமாக தொற்று குறையாததால் பள்ளிகள் ஜனவரி 15ஆம் தேதி வரை திறக்கப்படாது என மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.