வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

முத்துராஜை இரண்டு, மூன்று நாள்களில் கைது செய்வோம்: சிபிசிஐடி காவல்துறை தலைவர் சங்கர் 

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் தலைமறவாகியுள்ள காவலர்  முத்துராஜை இரண்டு, மூன்று நாட்களில் கைது செய்வோம்.

News image
Updated On :3 ஜூலை 2020, 7:27 am

DIN


சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் தலைமறவாகியுள்ள காவலர்  முத்துராஜை இரண்டு, மூன்று நாட்களில் கைது செய்வோம் என சி.பி.சி.ஐ.டி., காவல்துறை தலைவர் சங்கர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதல் தகவல் அறிக்கையில் 5 பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் காவலர் முத்துராஜை தவிர 4 பேரை கைது செய்துள்ளோம். சில கேமரா காட்சிகள் கிடைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவத்தன்று அன்று பணியாற்றிய காவலர்கள் நண்பர் குழுவையும் விசாரிப்போம்.

தேவைப்பட்டால், விசாரணையில் மேலும் சிலர் கூட கைது செய்யப்படலாம். இதில், அரசியல் தலையீடு இருப்பது என்ற தகவலெல்லாம் உண்மையல்ல.

தொடர்ந்து நேர்மையான விசாரணை நடந்து வருகிறது என சங்கர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.