

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைபேசிக்கு நள்ளிரவு வந்த அழைப்பில் பேசியவர் நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு வைத்துள்ளார்.
இதையடுத்து, விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.
மிரட்டல் விடுத்த விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்ற இளைஞரிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.