நெல்லையில் முழு பொதுமுடக்கம்: சாலைகள் வெறிச்சோடின

கரோனோ தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் முழு பொதுமுடக்கம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் வெறிச்சோடி காணப்பட்ட சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை.
திருநெல்வேலியில் வெறிச்சோடி காணப்பட்ட சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை.


திருநெல்வேலி: கரோனோ தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் முழு பொதுமுடக்கம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. பால், மருந்து கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின.

கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 6 ஆவது கட்டமாக ஜூலை 31 ஆம் தேதி வரை ஒரு சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தீநுண்மி வேகமாக பரவி வருவதைத் தடுக்கும் வகையில் ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி முதலாவது ஞாயிற்றுக்கிழமையையொட்டி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. பால், மருந்து கடைகள் மட்டுமே இயங்கின.

வண்ணார்பேட்டையில் உள்ள திருநெல்வேலி-திருவனந்தபுரம் சாலை.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், சந்திப்பு பேருந்து நிலையம்,  நகரம் ரத வீதிகள், திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை தெற்கு கடைவீதி, மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் ஆள்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன. எப்போதும் போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படும் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, திருநெல்வேலி-திருவனந்தபுரம் சாலை, திருநெல்வேலி-சங்கரன்கோவில் சாலை, திருநெல்வேலி-தூத்துக்குடி சாலை உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்பட்டன.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் மருந்துகள் வாங்க மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பொதுமுடக்கத்தையொட்டி திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com