
திருப்பதி: திருப்பதியில் கேப்டன் தொலைக்காட்சி செய்தியாளராக பணிபுரிந்து வந்த சுப்ரமணியம் ஞாயிற்றுக்கிழமை இரவு கரோனா தொற்று காரணமாக மரணமடைந்தார்.
திருப்பதியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் 135 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவிலும் இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3900 கடந்துள்ளது.
இந்நிலையில், திருப்பதியில் கேப்டன் தொலைக்காட்சி செய்தியாளராக பணிபுரிந்து வரும் சுப்ரமணியம் கடந்த ஒரு வாரத்திற்கு முன் மூச்சுத்திணறல் காரணமாக திருப்பதியில் உள்ள பத்மாவதி கரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஒரு வாரத்தில் திருப்பதியில் இது 2வது ஊகடவியலாளர் மரணம்.
இதையடுத்து கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்து கொண்ட ஊடகவியலாளர்கள் 7 பேருக்கு தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் சிலரின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் திருப்பதியில் உள்ள ஊடகவியலாளர்கள் அச்சத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.