அரசு அலுவலங்கள் நல்லபெயர் வாங்குவது அதன் தலைவன் வசமே உள்ளது 

ஒரு சேனையின் பலம் அதனை வழிநடத்துபவனிடமே உள்ளது. அதுபோல் அரசு அலுவலங்கள் நல்லபெயர் வாங்குவதும் அதன் தலைவன் வசமே உள்ளது. 
அரசு அலுவலங்கள் நல்லபெயர் வாங்குவது அதன் தலைவன் வசமே உள்ளது 
Published on
Updated on
2 min read


ஒரு சேனையின் பலம் அதனை வழிநடத்துபவனிடமே உள்ளது. அதுபோல் அரசு அலுவலங்கள் நல்லபெயர் வாங்குவதும் அதன் தலைவன் வசமே உள்ளது. 

அந்த வகையில்  காட்டுமன்னார்கோவில்  துணை மின் நிலையம் தூய்மையான வளாகமாக, பாதுகாப்பு விழிப்புணர்வு விளக்க படங்கள் வரையப்பட்டும், மின் சிக்கனம் செய்வது பற்றிய வாசகங்கள் எழுதப்பட்டும், பார்வையாளர்கள் அமருமிடம், வாகன நிறுத்துமிடம், சோப்புடன் கூடிய கைகழுவும் தொட்டி, ஆங்காங்கே பூச்செடிகள் மரக்கன்றுகள், இன்முகம் காட்டும் ஊழியர்கள் என அரசு துறை புதிய முகம் காட்டுகிறது. 

முத்தாய்ப்பாக மின்சார தந்தை என அழைக்கப்படும் மைக்கேல் ஃபாரடே வின் உருவப்படத்தினை வரைந்து அவரை பற்றிய குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன. 

காட்டுமன்னார்கோவிலின் கிழக்கில் 2.5 ஏக்கர் பரப்பில் 1993 இல் துணை மின் நிலையமாக உருவாக்கப்பட்டு பந்தநல்லூர்- கருப்பூரில் இருந்து  எரிவாயு மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெற்று சுமார் 65000க்கும் அதிகமான வீடுகளுக்கும் 2500க்கும் அதிகமான விவசாய பம்பு செட்டுகளுக்கும் விநியோகிக்கும் பொறுப்பினை செய்து வருகின்றனர். 

இதனை சிறப்பாக செய்து முடித்திருக்கும் உதவி செயற்பொறியாளருக்கும் அதற்கு ஒத்துழைப்பு தந்த உயர் அதிகாரிகளுக்கும் காட்டுமன்ன்னார்கோவில் மக்கள் சார்பாக பாராட்டுதல்கள் தெரிவித்துள்ளனர் மின்நிலையத்தை பார்த்து பரவசம் அடைந்த பாராட்டும் மனம் படைத்தவர்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com