சாத்தூர்: இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

சாத்தூர்: இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆலயங்களைத் திறக்கக் கோரி இந்து முன்னணியினர் சாத்தூரில் உள்ள பழமையான கோவில்களில் ஒற்றைக்காலில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Published on


விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆலயங்களைத் திறக்கக் கோரி இந்து முன்னணியினர் சாத்தூரில் உள்ள பழமையான கோவில்களில் ஒற்றைக்காலில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் கடந்த 75 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடைகள் மற்றும் வழிபாட்டு தளங்கள் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 

இதனால் கோவில்கள் மசூதிகள் தேவாலயங்கள் என அனைத்தும் மூடப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜூன் 1 முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் கடைகள் சலூன்கள் மற்றும் அரசு மது பானக்கடைகள் வரை அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. எனினும் வழிபாட்டு தளங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,

இந்நிலையில் புதன்கிழமை விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள பெருமாள் கோவில் மற்றும் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் போன்ற பழமை வாய்ந்த கோவில்கள் முன்பு கோவில்களில் வழிபாடு செய்வதற்கு ஆலங்களை திறக்கக் கோரி இந்து முன்னனி அமைப்பின் தலைமையில் ஒற்றைக்காலில் நின்று கோஷம் போடும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து முன்னனி  அமைப்பின் தலைமையின் கீழ் 5 உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து ஒற்றைக்காலில் நின்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ரயில் மற்றும் அரசு மதுபானக்கடைகள் வரை திறந்த அரசுக்கு மக்கள் வழிபாட்டிற்கு மறுத்து கோவில்களை திறக்காததை கண்டிக்கிறோம் எனக் கோஷங்கள் எழுப்பி ஒற்றைக்காவில் நின்று கோஷம் போட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இறுதியில் பூட்டிக்கிடக்கும் கோவில் வாசலில் சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com